'இன்பத் திருமணம்' உலகம் முழுவதும் தற்போது பேசுபொருளாக உள்ள ஒரு சொல். திருமணம் ஒரு சாதாரண வார்த்தை தானே? அதில் என்ன பேசு பொருள் என்று யாரும் கருத முடியாதபடி தற்போதைய கள சூழ்நிலைகள் அதனை பொய்யாக்கி வருகிறது. அரபு நாடுகளில் அதுவும் ஈராக் போன்ற நாடுகளில் இந்த வகையான திருமணங்கள் சகட்டு மேனிக்கு நடைபெற்று வருகிறது. ஒரு குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே நடைபெற்று வந்த இத்தகைய திருமணங்கள் தற்போது உலகம் முழுவதும் விரைவில் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். முதலில் இன்பத்திருமணம் என்றால் என்ன? என்பது குறித்தும், அதன் பின்னணியில் உள்ள உள் அரசியலையும் அறிந்துகொள்வதே இந்த விஷயம் குறித்து நம்மால் முழுமையாக புரிந்துகொள்ள உதவும்.

ghk

Advertisment

அதன்படி, விவாகரத்தான ஆண்கள் மற்றும் திருமணம் முடியாத சில இளைஞர்கள் தங்கள் உடல் இச்சைக்காக 10 முதல் 12 வயது வரை உள்ள சிறுமிகளை திருமணம் செய்து கொள்ளும் முறையே இன்பத் திருமணம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஒரு நாளில் இருந்து அதிகபட்சமாக 99 ஆண்டுகள் வரை சிறுமிகளை குத்தகைக்கு எடுத்து காமுகர்கள் தங்களது இச்சைகளை இந்த திருமணம் மூலம் தீர்த்துக் கொள்கிறார்கள். இந்த திருமணம் அரபு நாடுகளில் மிகப் பிரபலம் என்றாலும் தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிறுமிகளின் குடும்ப வறுமையை சாதகமாக்கிக் கொண்டு சில மத குருமார்கள், அவர்களை இன்பத் திருமணம் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து ஈராக்கில் பிபிசி-ன் செய்தியாளர் ஒருவர், இதனை மறைமுகமாக படம் பிடித்து ஆவணப்படமாக வெளியிட்டுள்ளார். இந்த ஆவணப்படத்தின் மூலமாகவே இந்த கொடூரம் அம்பலமாகியிருக்கிறது.

fgh

Advertisment

பெரும்பாலும் 10 வயதை கடந்த சிறுமிகள், இன்பத் திருமண முறையில் ஈடுபடுத்தப்படுவதாக கூறப்படுகிறது. சிறுமிகளை குத்தகைக்கு எடுப்பவர்கள் கால நேரத்துக்கு ஏற்ப வரதட்சணை கொடுக்க வேண்டும். இதில் கொடுமை என்னவென்றால், இந்த நடைமுறையை சில மதகுருமார்கள் நியாயப்படுத்தும் சம்பவமும் நடைபெறுகிறது. "சிறுமிகளிடம் ஒப்புதல் பெற்றே இந்த திருமணம் நடப்பதால் அது பாலியல் வன்கொடுமை ஆகாது என்றும், அவர்களுக்கு வரதட்சணையாக பணம் கொடுப்பதால் இதில் எந்த தவறும் இல்லை என்றும் மதகுருமார்களில் சிலர் சொல்கிறார்கள். மேலும், சிறுமிகள் கர்ப்பமடையாமல் இருக்க அவர்களுக்கு கருத்தடை ஊசி போடப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.