சவுதி இளவரசராக பொறுப்பேற்ற முகமது பின் சல்மான் தொடர்ந்து பெண்கள் முன்னேற்றத்திற்கான பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

Advertisment

saudi

பெண்கள் கார் ஓட்டலாம் என்றும், ஆண் துணையின்றி வெளிநாடு போக அனுமதிப்பது, பெண் சுற்றுலா பயணிகளுக்கான ஆடை கட்டுப்பாடுகளை தளர்த்தியது உள்ளிட்ட பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அந்தவகையில் தற்போது சவுதி உணவகங்களில் பெண்களுக்கென வைக்கப்பட்டிருக்கும் தனி வாயில்களை எடுக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. சவுதியில் உள்ள உணவகங்களில் ஆண்களுக்கு ஆதியாக ஒரு வாயிலும், பெண்கள் மற்றும் குடும்பத்தினருக்கென தனி வாயிலும் அமைக்கப்பட்டு, தனித்தனி வாயில்களாக பின்பற்றப்பட்டு வந்தது. இது இனி ஒரே வாயிலாக இருக்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.