Advertisment

சவுதி அரேபிய எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல்!

Saudi Aramco’s Jeddah oil depot incident

Advertisment

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் ஆலை கிடங்கில் ஹவுத்தி கிளர்ச்சிப் படையினர் ஏவுகணைகளை வீசித் தாக்குதலை நடத்தினர்.

சவுதி அரேபியா மீது ஏமன் நாட்டில் இருந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, தலைநகர் ஜெட்டாவில் உள்ள அரசின் அறம்கோ எண்ணெய் கிடங்கு மீது நேற்று தாக்குதல் நடந்தது. எண்ணெய் கிடங்குகள் மீது ஏவுகணைகள் வந்து விழுந்ததாகவும், இதில் இரண்டு கொள்கலன்கள் தீப்பிடித்து எரிந்ததாகவும், சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலக புகழ் பெற்ற பார்முலா 1 கார் பந்தயத்தின் இரண்டாவது கட்டம், இன்று நடைபெறவிருந்த இடத்தின் அருகேயே, இத்தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், உரிய பாதுகாப்புடன் கார் பந்தயம் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டால், அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என சவுதி அரேபியா அண்மையில் தெரிவித்திருந்தது.

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றன. ஏமன் அரசுக்கு சவுதி ஆதரவு அளித்து வரும் நிலையில், அந்நாட்டின் மீதும் கிளர்ச்சியாளர்கள் தாக்கி வருகின்றன. ஹவுத்தி கிளர்ச்சிப்படையினருக்கு ஈரான் ஆதரவாக இருந்து வருகிறது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe