mohammed bin salman

Advertisment

சவுதியை அரேபியாவை சேர்ந்தவர் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி. இவர் அந்தநாட்டின் மன்னரையும், இளவரசர்களையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்தநிலையில் இவர், கடந்த 2018 ஆம் ஆண்டுஅக்டோபர் மாதம் 2-ஆம் தேதி துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக பல சர்ச்சைகள் ஆதாரங்கள் எல்லாம் வெளிவந்த பிறகு,சவுதி அரேபியா அரசுகொலை செய்ததை ஒப்புகொண்டது. அதன் பின் அதுதொடர்பாக 18 பேரை சவுதி அரேபியா கைதுசெய்தது. மேலும்அதில்ஐந்து பேருக்குமரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் சவுதிஅரேபியாதெரிவித்தது.

ஆனால் சவுதிஇளவரசர்முகமது பின் சல்மானுக்கும் இந்த கொலையில்பங்கு இருப்பதை, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமைகணித்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட்நிறுவனம் செய்தி வெளியிட்டது. ஆனால் இதனைசவுதிஅரசு மறுத்தது.

Advertisment

இந்தநிலையில் அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ளஅறிக்கையில்,சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் கைது செய்ய அல்லது கொலை செய்ய, துருக்கியின் இஸ்தான்புல்லில் ஒரு நடவடிக்கைக்கு சவூதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான் ஒப்புதல் அளித்ததாக நாங்கள் கருதுகிறோம். அவர் பச்சைக்கொடி காட்டாமல், இந்த கொலைநடக்க சாத்தியமில்லை.ஜமால் கஷோகிகொல்லப்பட்டவிதம், அதிருப்தியாளர்களை அமைதியாக்க, வன்முறைக்கு ஆதரவளிக்கும் இளவரசரின்நடவடிக்கைக்கு பொருந்துவது போல் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் ஜமால் கஷோகிகொல்லப்பட்டதற்கு, சவுதிஇளவரசருக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்கா வெளிப்படையாக குற்றஞ்சாட்டியிருப்பது இதுவேமுதல் தடவை என்பதுகுறிப்பிடத்தக்கது.