/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/New Project (44)_0.jpg)
ஏமன் நாட்டில் அதிபர் அப்தரபு மன்சூர் ஹாடி தலைமையிலான அரசுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் மோதல் நடந்துவருகிறது. இந்த மோதலில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகளின் கூட்டு படைகள் சவுதி அரேபியா தலைமையில் ஹவுதி அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனையடுத்து ஹவுதி அமைப்பு, அந்த கூட்டு நாடுகளுக்கு எதிராக தாக்குதல்களை நிகழ்த்திவருகிறது. ஹவுதி அமைப்புக்கு ஈரான் ஆதரவளித்து வருகிறது.
இந்தநிலையில்நேற்று முன்தினம்ஹவுதி அமைப்பு, ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரானஅபுதாபியில் புதிய விமானநிலையம்உள்பட இரண்டு இடங்களில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்துசவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள், ஹவுதி அமைப்பினரை குறிவைத்து, அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும் ஏமன் நாட்டின் தலைநகர்சனாவில் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். பலியான இந்த இருபது பேரில் 14 பேர் ஒரே கட்டிடத்தில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)