Advertisment

ஒரே நாளில் 81 பேருக்கு மரணத் தண்டனை நிறைவேற்றிய சவூதி அரேபியா!

Saudi Arabia Executes 81 People In 1 Day

Advertisment

சவூதி அரேபியாவில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 81 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக சவூதி அரேபியா அரசின் செய்தித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகளைக் கொலை செய்தவர்களுக்கும், அல் கெய்தா, ஐ.எஸ்., சவூதி கிளர்ச்சியாளர்களுக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான மரணத் தண்டனை எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், சவூதி அரேபியாவில் தற்போது கழுத்தை அறுத்து மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

சவூதி அரேபியாவில் கடந்த 1980- ஆம் ஆண்டு மெக்கா மசூதியை கைப்பற்றியப் போராட்டக்காரர்கள் 63 பேருக்கு ஒரே நாளில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது.

government
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe