Skip to main content

"கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு பொறுப்பேற்க முடியாது"- சவூதி அரேபியா அரசு அறிவிப்பு!

Published on 22/03/2022 | Edited on 22/03/2022

 

Saudi Arabia cannot be held responsible for rising crude oil prices

 

கச்சா எண்ணெய் திடீர் விலை உயர்வுக்கு பொறுப்பேற்க முடியாது என சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. 

 

சவூதி அரேபியா உள்ளிட்ட எண்ணெய் வள நாடுகளின் பல எண்ணெய் கிணறுகள், சேமிப்பு கிடங்குகள் ஏமன் நாட்டில் அமைந்துள்ளன. ஏமன் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்களின் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளனர். ஒபக் எனப்படும் எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த கிடங்குகள் எண்ணெய் கிணறுகள் உள்ள பகுதிகளில் ஏமன் அரசுப் படைகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே நடைபெறும் சண்டையால், கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

 

ஏற்கனவே, உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், வளைகுடா நாடுகள் கூடுதலாக பெட்ரோல் பொருட்களை விநியோகிக்க அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், ஏமனில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டதால், திங்களன்று பிரென்ட் ரக கச்சா எண்ணெய் விலை 4% அதிகரித்து, ஒரு பேரல் 112 டாலரானது. 

 

அமெரிக்காவில் பெட்ரோலிய பொருட்களின் விலை 4.33 டாலர் அதிகரிக்கப்பட்டது. பல நாடுகளில் இதே நிலை ஏற்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று சவூதி அரேபியா அறிவித்துள்ளது. 

 

ஏமன் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிக் கிளர்ச்சியாளர்கள் 2014- ஆம் ஆண்டு கடும் தாக்குதலை நடத்தி, தலைநகர் சானா உள்ளிட்ட வட பகுதிகளைப் பிடித்தனர். அப்போது, சவூதி அரேபியா மற்றும் கூட்டாளி நாடுகள் வான்வெளி தாக்குதலை நடத்தி ஹவுதிக் கிளர்ச்சியாளர்களைப் பின்வாங்கிச் செய்தனர். ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஏமன் மீது ஹவுதிக் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்