சீனாவின்வூஹான்நகரிலிருந்துகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவதொடங்கியகரோனாவைரஸ்உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்கரோனாபரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி,கல்லூரிகளுக்குக்காலவரையற்ற விடுமுறைவழங்கப்படுவதாகச்சவுதி அறிவித்துள்ளது.

saudi announces holidays for educational institution

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சீனாவிலிருந்து பரவ தொடங்கிய இந்தவைரஸ்இன்று உலகின் பெரும்பான்மை நாடுகளை மிரட்டி வருகிறது. உலகம் முழுவதும் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்ட சூழலில், சுமார் 3,500 பேர் இதன்காரணமாகப்பலியாகியுள்ளனர்.வைரஸ்பாதிப்பின் தீவிரம் உலகம் முழுவதும் அதிகரித்திருக்கும் சூழலில், பல்வேறு நாடுகளில் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.

இந்நிலையில் தனது நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று முதல் காலவரையற்ற விடுமுறையை அளித்துள்ளது சவுதி அரசு. அரசின் அறிவிப்பின்படி, அனைத்து விதமான அரசு,தனியார்ப்பள்ளிகள், பயிற்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்குக் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.