Skip to main content

விண்வெளியிலிருந்து பார்த்தால் படேல் சிலை எப்படி இருக்கும்... 

Published on 17/11/2018 | Edited on 17/11/2018
sardar


பிரதமர் மோடி கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு குஜராத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை திறந்து வைத்தார். 143வது சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியாவின் ஒற்றுமையை கொண்டாடும் விதமாக இந்த சிலை திறக்கப்பட்டது. சுமார் ரூ. 2900 கோடி செலவில் உலகின் உயர்ந்த சிலையான இந்த சிலை கட்டப்பட்டுள்ளது. குஜராத்திலுள்ள நர்மதா அணைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள இந்த சிலை திறப்பு விழாவை முன்னிட்டு இந்தியாவிலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் தலைவர்கள் வந்து கலந்துகொண்டனர்.  இந்த சிலை திறக்கப்பட்ட பின்னர், ஒரு நாளுக்கு 15,000 பார்வையாளர்கள் வருவார்கள் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து இங்கு வந்து இந்த சிலையை உலக மக்கள் பார்த்து வருகின்றனர். 
 

இந்த சிலை திறந்த நிலையில், இச்சிலையின் பல்வேறு விதமான புகைப்படங்கள் வெளியாகி வந்தன. தற்போது அமெரிக்க நிறுவனம் ஒன்று இதுவரை வெளியான புகைப்படங்களை மிஞ்சும் அளவுக்கு சர்தார் வல்லபாய் படேலின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அது என்ன என்றால், விண்வெளியில் இருந்து டாப் ஆங்கிலில் இந்த சிலையின் புகைப்படத்தை படம் எடுத்து வெளியிட்டுள்ளது. ஸ்கை லாப் என்று சொல்லப்படும் இந்த நிறுவனம் தனது செயற்கை கோள் மூலம் இச்சிலையின் புகைப்படத்தை எடுத்துள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்