Advertisment

உலகின் மிக இளம் வயது பிரதமர்... சாதனை படைத்த பெண்...

உலகின் மிகவும் இளம் வயது பிரதமராக சன்னா மரின் என்ற பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்லாந்தின் போக்குவரத்து அமைச்சரான சன்னா மரின், சமூக ஜனநாயகக் கட்சியை வழிநடத்த தேர்வு செய்யப்பட்டு, நாட்டின் மிக இளம் வயது பிரதமராக பதவியேற்க உள்ளார்.

Advertisment

sanna marin to become the worlds youngest prime minister

34 வயதான மரின் பின்லாந்தின் மூன்றாவது பெண் பிரதமர் ஆவார். ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் பின்லாந்தின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது சமூக ஜனநாயக கட்சி. கடந்த ஜூன் மாதம் பிரதமராக அறிவிக்கப்பட்ட ஆண்டி ரின்னே பதவி விலகிய நிலையில், தற்போது சன்னா மரின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உக்ரைன் நாட்டின் பிரதமராக உள்ள ஒலெக்ஸி ஹான்சருக் (35) தான் தற்போது உலகின் மிக இளம் வயது பிரதமர் ஆவார். அவரின் இந்த சாதனையை முறியடித்து 34 வயதே ஆன சன்னா மரின் உலகின் மிக இளம் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

finland
இதையும் படியுங்கள்
Subscribe