Advertisment

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் விலங்கினம்!

GREAT APES

Advertisment

முதன்முதலில் சீனாவில் பரவத்தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று, மற்ற நாடுகளுக்கும் பரவி உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த கரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அதில்இந்தியா,அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வெற்றியும் கண்டன. இதனையடுத்து தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும்தடுப்பூசிசெலுத்தும் பணிகள்நடைபெற்று வருகிறது.

Advertisment

மனிதர்களை மட்டுமில்லாமல், பல்வேறு நாடுகளில் பல்வேறு விலங்குகளுக்கும் கரோனாதொற்று உறுதியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில், நான்கு ஒராங்குட்டான் வகை குரங்குகளுக்கும் மற்றும் ஐந்து போனொபோ வகை குரங்குகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மனிதர்களுக்குப் பிறகு, கரோனாதடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல் இனம் என்ற பெயரை குரங்கினம் பெற்றுள்ளது. கடந்த ஜனவரிமாதம், இந்த உயிரியல் பூங்காவில் எட்டு கொரில்லாக்களுக்கு கரோனாதொற்று ஏற்பட்டநிலையில், அந்தப் பூங்காவில் உள்ள மற்ற வகை குரங்குகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கரோனா தொற்று ஏற்பட்டகுரங்குகளுக்கு ஏற்கனவே கரோனாவிற்கு எதிரானநோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும் என்பதால் அவற்றுக்குத் தடுப்பூசிசெலுத்தப்படவில்லை.

குரங்குகளுக்குப் போடப்பட்டஇந்த தடுப்பூசியைக் கால்நடை மருந்து நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்டகரேன் என்ற குரங்கிற்கு ஏற்கனவே 1994இல் ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது.ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்துகொண்ட முதல் ஓராங்குட்டான் வகை குரங்கு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

America coronavirus vaccine Monkey oranguttan
இதையும் படியுங்கள்
Subscribe