93 பெண்களை கொடூரமாக கொலை செய்த முன்னாள் குத்துசண்டை வீரர்... உலகையே அதிரவைத்த வாக்குமூலம்..

நாடு முழுவதும் 16 மாநிலங்களில் 93 பெண்களை கொலை செய்துள்ளதாக அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தை சேர்ந்தமுன்னாள் குத்துசண்டை வீரரானசாமுவேல் மெக்டவல் (79) என்ற நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Samuel Little case details

கடந்த 1970 முதல் 2005 வரையிலான 30 ஆண்டுகளில் அமெரிக்கா முழுவதிலும் உள்ள 16 மாநிலங்களில் 93 இளம்பெண்களை இவர் கொன்றுள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது. போதைப்பொருள் குற்றச்சாட்டில் கடந்த 2012 ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த விசாரணையின் போது, 1987-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 3 பெண்களை கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு தொடர்பு இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் இதுகுறித்து நடந்த விசாரணையில் பல அதிரவைக்கும் தகவல்களையும் அவர் கூறியுள்ளார்.

வெவ்வேறு ஊர்களுக்கு செல்லும் அவர், அங்கிருக்கும் பாலியல் தொழில் செய்யும் பெண்கள் மற்றும் போதைக்கு அடிமையான பெண்களைகுறிவைத்தே இந்த கொலைகளை செய்து வந்துள்ளார். அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் தற்போதுவரை 50 கொலைகளை அவர் செய்துள்ளது ஆதாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை அமெரிக்க வரலாற்றில் பிடிக்கப்பட்டதிலேயே அதிக கொலைகள் செய்த சீரியல் கில்லர் சாமுவேல் மெக்டவல் தான் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

America
இதையும் படியுங்கள்
Subscribe