செல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அந்த வரிசையில் தற்பொழுது அதன் விளம்பரம் ஒன்று சர்ச்சையாகி உள்ளது. சாம்சங் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள கேலக்ஸி ஸ்டார் 8 மொபைலுக்காக மலேசியா நாட்டில் வெளியிடப்பட்ட விளம்பரம் தான் சர்ச்சைக்கு காரணம். இந்த போனின் கேமரா தரத்தை காட்ட அதில் எடுக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த புகைப்படம் டி.எஸ்.எல்.ஆர் கேமராவில் எடுக்கப்பட்டது என அதனை எடுத்த புகைப்பட கலைஞர் தெரிவித்துள்ளார். இது அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களை ஏமாற்றும் சாம்சங்... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்...
Advertisment