Advertisment

புற்றுநோய், கருகலைப்பு, உயிர் இழப்பு... தொழிலாளர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய சாம்சங் நிறுவனம்...!

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு புற்றுநோய், கருகலைப்பு மற்றும் சில தொழிலாளர்கள் உயிர் இழப்பு போன்ற விஷயங்கள் நிகழ்ந்தது. இது தொடர்பாக சியோல் நீதிமன்றத்தில் 2007-ல்பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க சாம்சங் நிறுவனம் ஒப்புக்கொண்டது.

Advertisment

ss

அதன்படி பாதிக்கப்பட்டோருக்கு தலா ரூ 15 கோடி வரை இழப்பீடை, சியோலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இழப்பீடு வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களிடம்சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிம் கி நம் பகிரங்க மன்னிப்புக் கோரினார். அதேபோல் செமிகண்டர் மற்றும் எல்சிடி தயாரிப்புத் தொழிற்சாலையில் தொழிலாளர்களின் நலனை உறுதி செய்யக்கூடிய பணியை உரியமுறையில் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

samsung
இதையும் படியுங்கள்
Subscribe