ADVERTISEMENT

ரஷ்யா கண்டறிந்த கரோனா தடுப்பூசி... பக்கவிளைவுகள் இல்லை எனத் தகவல்...

02:55 PM Jun 19, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ள கரோனா தடுப்பூசி மனிதர்களிடம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலகம் முழுவதும் இதுவரை 86 லட்சத்திற்கு மேற்பட்டோரைப் பாதித்துள்ளது, இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 4.5 லட்சத்திற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நூற்றாண்டின் மிகமோசமான தொற்று நோயாகப் பார்க்கப்படும் இந்த வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டறிய உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆராய்ச்சிகள் அனைத்தும் பல்வேறு கட்டங்களில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு கரோனா தடுப்பூசி, மனிதர்களுக்குச் செலுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய மருத்துவமனை ஒன்றில் 18 தன்னார்வலர்களுக்கு இந்த கரோனா தடுப்பூசி முதல் முறையாகப் போடப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஊசி போடப்பட்ட நபர்கள் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பிலிருந்து வரும் நிலையில், இதுவரை அவர்களுக்கு எந்தவொரு பக்க விளைவோ, அல்லது உடல்நலக் கோளாறோ ஏற்படவில்லை என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT