vladimir putin

Advertisment

ரஷ்ய நாட்டில் அண்மைக்காலமாக கரோனாவால்பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த வியாழக்கிழமை மட்டும் கரோனாவால்1,028 பேர் உயிரழந்தனர். 2020 ஆம் ஆண்டில் கரோனாபரவ தொடங்கியதிலிருந்து அந்தநாட்டில்இத்தனை உயிரிழப்புகள்ஏற்படுவது இதுவே முதல் தடவை.

இதனையடுத்துரஷ்யஅமைச்சரவை, கரோனாபரவலைக் கட்டுப்படுத்த வரும் 30 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஏழுநாட்களுக்குஊதியத்தோடு விடுமுறை அளிக்க அதிபர் புதினுக்கு பரிந்துரைத்தது. அடுத்த ஏழு நாட்களில் 4 நாட்கள் தேசிய விடுமுறை என்பதால், இந்த பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த பரிந்துரையை ரஷ்யஅதிபர் புதினும் ஏற்றுக்கொண்டு, வரும் 30 ஆம் தேதி முதல் வேலையில்லா வாரத்தைஅமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதனால்ரஷ்ய ஊழியர்களுக்கு அக்டோபர் 30 முதல் அடுத்த ஏழுநாட்களுக்குஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படவுள்ளது.