The Russian president suddenly apologized by Azerbaijan plane crash

அஜர்பைஜான் நாட்டின் பாக்கு என்ற இடத்தில் இருந்து ட்ரோஸ்னி என்ற 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் விமானம் ஒன்று கடந்த 25ஆம்தேதிசென்று கொண்டிருந்தது. கஜகஸ்தான் நாட்டின் அக்டாவ் என்ற இடத்தில் பறந்துகொண்டிருந்த போது கீழே விழுந்து நொறுங்கி விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த விமான விபத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விமான விபத்து குறித்து விசாரணையும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த சூழலில், அஜர்பைஜான் பயணிகள் விமானத்தை ரஷ்யா ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியது. அதற்கு ஆதாரமாக, விமான பாகங்களில் குண்டு துளைக்கப்பட்ட காட்சிகளை உக்ரைன் வெளியிட்டுள்ளது. உக்ரைனின் குற்றச்சாட்டை மறுத்த ரஷ்யா, விசாரணை முடியும் முன்பே இவ்வாறு குற்றச்சாட்டு வைப்பது சரியல்ல என ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

Advertisment

இந்த நிலையில், அஜர்பைஜான் விமான விபத்துக்கு அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியோவிடம் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘அஜர்பைஜான் பயணிகள் விமானம், அதன் அட்டவணைப்படி பயணித்தது, மீண்டும் மீண்டும் க்ரோஸ்னி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. அந்த நேரத்தில், க்ரோஸ்னி, மொஸ்டோக் மற்றும் விளாடிகாவ்காஸ் ஆகியவை உக்ரேனிய ஆளில்லா வான்வழி வாகனங்களால் தாக்கப்பட்டன, ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்த தாக்குதல்களை முறியடித்தன.

The Russian president suddenly apologized by Azerbaijan plane crash

ரஷ்ய வான்வெளியில் நடந்த சோகமான சம்பவத்திற்கு அதிபர் விளாடிமிர் புதின் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த மற்றும் உண்மையான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். இந்த விபத்துக் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த தாக்குதலுக்கு வெளிப்படையாக பொறுப்பேற்காமல் ரஷ்யா அதிபர் மன்னிப்பு கேட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment