Advertisment

கோளாறு செய்த காருக்கு நூதன முறையில் தண்டனை கொடுத்த முதலாளி... திட்டி தீர்க்கும் பொதுமக்கள்!

பரபரப்புக்காக சிலர் எதையும் செய்ய தயாராக உள்ளார்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு சம்பவம் ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது. அந்த நாட்டை சேர்ந்த மொராஸ் என்பவர் தான் வாங்கிய காரை நூதன முறையில் உடைத்த சம்பவம் தற்போது அந்நாட்டில் பேசு பொருளாக உள்ளது. அவர் கடந்த ஆண்டு மெர்சடிஸ் காரை பல லட்சம் ரூபாய் கொடுத்து ஆசையாக வாங்கியுள்ளார். அந்த கார் வாங்கியதில் இருந்து பல்வேறு வகையான முறைகளில் கோளாறு செய்துள்ளது. இதனால் எரிச்சல் அடைந்த அவர் காரை உடைத்து நொறுக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.

Advertisment

ஆனாலும், நமக்கு இவ்வளவு சோதனைகளை கொடுத்த இந்த காரை பழிவாங்கியே தீர வேண்டும் என்று நினைத்த அவர், அதனை ஒரு ஹெலிகாப்பர் உதவியுடன் 500 அடிக்கு மேல் வானில் தூக்கிச் சென்று அங்கிருந்து அதனை கீழே போட்டுள்ளார். இதனை வீடியோவாக எடுத்து அவர் இணையத்திலும் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த மக்களை அவரை சரமாரியாக வசைபாடி வருகிறார்கள்.

Advertisment

VIRAL PHOTO
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe