சார்ஜ் போட்டிருந்த செல்போன் தவறி குளியல் தொட்டிக்குள் விழுந்ததில் ஷாக் அடித்த 26 வயதான இளம்பெண் உயிரிழந்துள்ளார்.

Advertisment

russian accountant electrocuted in bathtub

ரஷ்யாவின் கிரோவோ-செபேட்ஸ்க் நகரை சேர்ந்த 26 வயது இளம்பெண் எவ்ஜீனியா சுல்யாதியேவா. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த புதன்கிழமை குளிப்பதற்காக தனது வீட்டில் உள்ள குளியல் அறைக்குள் சென்றுள்ளார். அப்போது தனது போனையும் எடுத்து சென்ற அவர், அதனை தனது குளியல் தொட்டிக்கு மேலே உள்ள இடத்தில் சார்ஜ் போட்டு வைத்துவிட்டு குளித்துள்ளார்.

அப்போது மேலே சார்ஜ் போடப்பட்டிருந்த அவரது போன், தவறி குளியல் தொட்டிக்குள் விழுந்துள்ளது. இதனால் தண்ணீர் முழுவதும் மின்சாரம் பாய்ந்த நிலையில், அவர் தொட்டிக்குள்ளேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் தனது மகள் குளியலறையிலிருந்து திரும்ப வராததால் சந்தேகமடைந்த சுல்யாதியேவாவின் தாய் குளியலறைக்கு சென்று பார்த்துள்ளார்.

Advertisment

அப்போது அவரது மகள் குளியல் தொட்டியில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அவர் காவல்துறைக்கு தகவல் அளிக்க, அங்கு வந்த போலீசார் சுல்யாதியேவாவின் உடலை மீட்டனர். ரஷ்யாவில் மூன்று மாதங்களுக்கு முன் இதேபோல ஒரு இளம்பெண் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த பெண்ணின் மரணமும் அம்மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.