ADVERTISEMENT

நான்காம் நாளாக தொடரும் போர்... ரஷ்ய ஊடகங்களுக்கு கூகுள் கொடுத்த நெருக்கடி!

12:37 PM Feb 27, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ரஷ்யா, உக்ரைன் மீது நான்காவது நாளாக தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் மக்கள் உயிர் பிழைப்பதற்காக தங்கள் நாடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். பலர் மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட சுரங்கப்பாதைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது. வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு எதிரான தீர்மானத்தை ரஷ்யா தோற்கடித்தது. இந்நிலையில் ரஷ்யாவில் உள்ள அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி மற்றும் செய்தி ஊடகங்கள் கூகுள் நிறுவன தளங்கள் மூலம் வருமானம் பெறுவதற்கு கூகுள் நிறுவனம் தடைவிதித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் தலைமை அமைப்பான ஆல்பபெட் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்டவை தங்கள் மூலம் ரஷ்ய ஊடகங்கள் பெறும் வருமானத்திற்குத் தடைவிதித்திருந்த நிலையில் கூகுளும் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டு ஊடகங்களின் பெரும்பான்மை வருமானம் கூகுள் மற்றும் யூடியூப்பை நம்பியே இருக்கும் சூழலில் இந்நிறுவனங்களின் இந்த அறிவிப்புகள் அந்நாட்டு ஊடகத்துறைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT