உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஐந்தாவது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் காரணமாக லட்சக்கணக்கான உக்ரைனியர்கள், தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உக்ரைனுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்திருந்த நிலையில், உக்ரைனும் அதற்கு சம்மதித்தது. இந்த நிலையில், இரு தரப்பிற்கும் இடையேயான பேச்சுவார்த்தை தற்போது பெலாரஸில் தொடங்கியது.
மின்ஸ்க் நகரில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் மறுத்த நிலையில், தற்போது இந்தப் பேச்சுவார்த்தையானது கோமல் நகரில் நடைபெற்றுவருகிறது. இருநாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு போர் முடிவுக்கு வருமா அல்லது மீண்டும் போர் தொடருமா என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.