உக்ரைனைத் தாக்கும் ரஷ்யாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அந்நாட்டிற்கு வழங்கி வரும் தங்கள் சேவைகளை நிறுத்தி வைப்பதாக சர்வதேச பணப்பரிவர்த்தனை சேவை நிறுவனங்களான விசா கார்டு மற்றும் மாஸ்டர் கார்டு ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதையடுத்து, ரஷ்ய வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள விசா கார்டு மற்றும் மாஸ்டர் கார்டுகள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் செயல்படாது என அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர். மாஸ்டர் கார்டு மற்றும் விசா கார்டு நிறுவனங்களின் அறிவிப்பால் தங்கள் நாட்டு அரசு வங்கியின் வாடிக்கையாளர் சேவைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது.