ரஷ்யா, சைபீரியாவிலுள்ள நிஸ்னியாங்கார்க் நகரில் அமைந்திருக்கும் விமான நிலையத்திலிருந்து விமானம் ஒன்று புறப்பட்டது.

flight

Advertisment

ஓடுபாதையில் சென்றுகொண்டிருக்கும்போது, விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே அந்த விமானத்தை தரையிறக்கி நிறுத்த விமானிகள் அதீத முயற்சி செய்தனர். அது எதுவும் கைகூடாத நிலையில், அந்த விமானத்தை ஒரு வீட்டில் மோதி நிறுத்தினர். இதனால் அந்த விமானத்தின் முன்பகுதியில் தீ பற்றியது. இதில் அந்த இரு விமானிகளும் இறந்தனர். 7 பயணிகள் படுகாயமடைந்தனர். பயணிகளைக் காப்பாற்ற விமானிகள் செய்த முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். தரையிறங்கும் காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

Advertisment