ADVERTISEMENT

கரோனாவிலிருந்து விலங்குகளை காக்க வரும் கார்னிவாக்-கோவ்!

06:06 PM Apr 30, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கரோனாவிற்கு அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தி வருகின்றனர். அதேசமயம் கரோனா தொற்று விலங்குகளுக்கும் பரவியது. குரங்குகள், புலிகள் ஆகியவற்றுக்கும் கரோனா தொற்று பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

அதேசமயம், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள், விலங்குகளுக்கு கரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இந்தநிலையில் ரஷ்யா கடந்த மார்ச் மாதம், விலங்குகளுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தது. மேலும் அந்த கரோனா தடுப்பூசி நாய்கள், பூனைகள் மற்றும் நரிகள் ஆகிய விலங்குகளின் உடலில், கரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தாக ரஷ்யா கூறியது.

இந்தநிலையில் ஆய்வுகளை முடித்து, முதற்கட்டமாக விலங்குகளுக்கான கரோனா தடுப்பூசியை ரஷ்யா பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. விரைவில் இந்த ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளுக்கு விரைவில் விநியோகிக்கப்பட இருக்கிறது. மேலும் ஜெர்மனி, கிரீஸ், போலந்து, ஆஸ்திரியா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், மலேசியா, தாய்லாந்து, தென் கொரியா,லெபனான், ஈரான் மற்றும் அர்ஜென்டினா உள்ளிட்ட 20 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் இந்த தடுப்பூசியை வாங்க ஆர்வம் கட்டுவதாக ரஷ்யா கூறியுள்ளது.

இந்த தடுப்பூசிஅழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளை, கரோனாவிலிருந்து காக்குமென்றும், விலங்குகளில் மரபணு மாற்றமடைந்த வைரஸ் பரவுவதை தடுக்குமென்றும் ரஷ்யா கூறியுள்ளது. இந்த தடுப்பூசிக்கு ரஷ்யா கார்னிவாக்-கோவ் என பெயரிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT