Advertisment

கரோனா தடுப்பு மருந்து; மனிதர்கள் மீதான சோதனையில் நேர்மறையான முடிவுகள்...

russia finished human trails of covid vaccine

Advertisment

ரஷ்யா கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பூசி மனிதர்களிடையே வெற்றிகரமாகச் சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டறியும் ஆராய்ச்சிப் பணிகள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன. அந்த வகையில் ரஷ்யாவில் நடைபெற்று வந்த ஆராய்ச்சி ஒன்றில், கரோனா தடுப்பூசி மனிதர்களிடையே வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில், புதிய கரோனா தடுப்பூசி 38 தன்னார்வலர்கள் மீது சோதிக்கப்பட்டுள்ளது. இதன் ஆராய்ச்சி முடிவுகளில் இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செச்செனோவ் பல்கலைக்கழகத்தின் மருந்துகள் தொடர்பான மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைமை ஆய்வாளர் எலெனா ஸ்மோல்யார்ச்சுக், ரஷ்யசெய்தி நிறுவனத்திடம் இதுகுறித்து கூறுகையில், தடுப்பூசிக்கான மனிதச் சோதனைகள் பல்கலைக்கழகத்தில் நிறைவடைந்துள்ளதாகவும், தன்னார்வலர்கள் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் கூறினார். மேலும், மனிதர்கள் மீதான ஆராய்ச்சிகள் முடிவடைந்த சூழலில், தடுப்பூசி பாதுகாப்பானது எனத் தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மனிதர்கள் மீதான சோதனையில் நேர்மறையான முடிவுகள் கிடைத்துள்ள சூழலில், இந்தத் தடுப்பூசி எப்போது வணிக உற்பத்தி நிலைக்கு வரும் என்பது குறித்து தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

Russia corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe