Skip to main content

50,000 பணத்தை சாலையில் வீசிய இளைஞன்....அதை எடுக்க போட்டிப்போட்ட மக்கள்...

Published on 16/10/2018 | Edited on 16/10/2018

 

russia


ரஷ்யாவிலுள்ள செயிண்ட். பீட்டர்ஸ்பெர்க் நகரில் பரபரப்பாக இருக்கும் சாலை ஒன்றில், திடிரென காஸ்ட்லி கார் ஒன்றில் வந்த இளைஞர் கத்தை கத்தையாக பணத்தை எடுத்து நடுரோட்டில் வீசினார். காரை நகர்த்திகொண்டே பணத்தை வீசினார். அதை பார்த்த பொதுமக்கள் பணத்தை எடுக்க போட்டாபோட்டி போட்டுக்கொண்டு எடுத்தனர். இதனால் அந்த சாலையில் சிறிது டிராஃபிக் ஏற்பட்டது. 
 

அந்த வாலிபர் சாலையில் கிடந்த பணத்தை எடுக்க வந்தவர்களை பார்த்து, இந்த காகிதத்திற்காக மனிதன் தன் வாழ்க்கை முழுவதும் உழைக்கின்றான் என்று ஏழனமாக அந்த வீடியோவில் கூறியுள்ளது பதிவாகியுள்ளது. பின்னர் பணத்தை வீசியவர் ரஷ்யாவிலேயே மிகப்பெரிய கோடிஸ்வரரின் மகன் என்று தெரியவந்துள்ளது. இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். மேலும்,  அவர் இதற்கு முன்பு சகுதியில் மாட்டிய காரை எடுக்க கட்டுக்கட்டாக பணத்தை சகுதியில் வைத்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோவில் வீசப்பட்ட பணத்தின் மதிப்பு மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 50,000 இருக்கும் என்கின்றனர்.    
 

சார்ந்த செய்திகள்