92 வயது பத்திரிகையாளரின் 5வது திருமணம் நிறுத்தம்?

rupert murdoch and ann lesley smith marriage related issue

ஆஸ்திரேலியாவில் பிறந்து அமெரிக்ககுடியுரிமையுடன் அமெரிக்காவில் வசித்து வருபவர் ருபேர்ட் முர்டாச். மிக நீண்டகாலமாக சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் பல பத்திரிகைகளில் பணியாற்றி வருபவரும், பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களின் உரிமையாளருமான ருபேர்ட் முர்டாச் தன்னுடைய 92வது வயதில் 5வது முறையாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும் இவர்,பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் 66 வயதாகும் ஆன் லெஸ்லி ஸ்மித் என்பவரை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்ததுடன், இதுவே எனது கடைசி காதலாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். ஏற்கனவே 4 பேரைதிருமணம் செய்து4 பேரையும் விவாகரத்து செய்துள்ளார்.

இந்நிலையில், ருபேர்ட் முர்டாச் - ஆன் லெஸ்லி ஸ்மித் ஆகியோர் தங்களின் திருமணத்தை நிறுத்திவிட்டதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆன் லெஸ்லி ஸ்மித் கிறிஸ்துவத்தை பரப்புவதற்காக மேற்கொண்ட பிரசங்கத்தால் ருபேர்ட் முர்டாச் பெரும் சங்கடத்திற்கு உள்ளானதால்தனது காதலை முறித்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ருபேர்ட் முர்டாச் - ஆன் லெஸ்லி ஸ்மித் ஆகியோர் இது குறித்து ஏதும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

journalist love marriage
இதையும் படியுங்கள்
Subscribe