அந்தரத்தில் தொங்கிய மக்கள்... 100 அடி உயரத்திலிருந்து காப்பாற்ற கூச்சலிட்டதால் பரபரப்பு...(வீடியோ)

ரோலர் கோஸ்டர் மூலம் சுற்றுலா பயணிகள் பயணம் செய்த போது, தரை பரப்பிலிருந்து சுமார் 100 அடி உயரத்தில் பழுதடைந்து அவர்கள் அனைவரும் அந்தரத்தில் தொங்கிய பரபரப்பு சம்பவம் இங்கிலாந்து நாட்டில் நடந்துள்ளது.

roller coaster ride accident in england

இங்கிலாந்து நாட்டின் ஸ்டப்போர்ட்ஷைர் பகுதியில் உள்ள ஆல்டன் டவர் என்ற கேளிக்கை பூங்காவில், பயணிகள் ரோலர் கோஸ்டரில் பயணித்துள்ளனர். அப்போது திடீரென பாதி வழியில் ரோலர் கோஸ்டர் பழுதாகியுள்ளது. இதனால் பயணிகள் சுமார் `100 அடி உயரத்தில் சிக்கிதவித்துள்ளனர்.

முதலில் பயமுறுத்துவதெற்கென இவ்வாறு செய்கிறார்கள் என நினைத்த பயணிகள் அமைதியாக இருந்துள்ளனர். ஆனால் நேரம் அதிகரிக்க அதிகரிக்க பயணிகள் கூச்சலிட ஆரம்பித்துள்ளனர். பின்னர் 20 நிமிடங்களுக்கு பின்னர் ரோலர் கோஸ்டர் சரிசெய்யப்பட்டு பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

England VIRAL weird
இதையும் படியுங்கள்
Subscribe