Skip to main content

அந்தரத்தில் தொங்கிய மக்கள்... 100 அடி உயரத்திலிருந்து காப்பாற்ற கூச்சலிட்டதால் பரபரப்பு...(வீடியோ)

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

ரோலர் கோஸ்டர் மூலம் சுற்றுலா பயணிகள் பயணம் செய்த போது, தரை பரப்பிலிருந்து சுமார் 100 அடி உயரத்தில் பழுதடைந்து அவர்கள் அனைவரும் அந்தரத்தில் தொங்கிய பரபரப்பு சம்பவம் இங்கிலாந்து நாட்டில் நடந்துள்ளது.

 

roller coaster ride accident in england

 

 

இங்கிலாந்து நாட்டின் ஸ்டப்போர்ட்ஷைர் பகுதியில் உள்ள ஆல்டன் டவர் என்ற கேளிக்கை பூங்காவில், பயணிகள் ரோலர் கோஸ்டரில் பயணித்துள்ளனர். அப்போது திடீரென பாதி வழியில் ரோலர் கோஸ்டர் பழுதாகியுள்ளது. இதனால் பயணிகள் சுமார் `100 அடி உயரத்தில் சிக்கி தவித்துள்ளனர்.

முதலில் பயமுறுத்துவதெற்கென இவ்வாறு செய்கிறார்கள் என நினைத்த பயணிகள் அமைதியாக இருந்துள்ளனர். ஆனால் நேரம் அதிகரிக்க அதிகரிக்க பயணிகள் கூச்சலிட ஆரம்பித்துள்ளனர். பின்னர் 20 நிமிடங்களுக்கு பின்னர் ரோலர் கோஸ்டர் சரிசெய்யப்பட்டு பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story

இந்தியாவின் சுழல் கூட்டணியால் ஆட்டம் கண்ட இங்கிலாந்து

Published on 07/03/2024 | Edited on 09/03/2024
England were played by India's spinning alliance

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரை சதம் கடந்து 79 ரன்களில் ஆட்டம் இழந்தார். பேர்ஸ்டோ 29 ரன்களில் வெளியேறினார். கடந்த ஆட்டத்தில் ஃபார்முக்கு வந்த நட்சத்திர ஆட்டக்காரர்  ஜோ ரூட் 24 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

England were played by India's spinning alliance

கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில்  ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 8 ஓவர்களில் 26 ரன்களுடன் ஆடி வருகிறது. ரோஹித் 20, ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

வெ.அருண்குமார்