ADVERTISEMENT

ரூ. 710 கோடி பணம் கேட்பேன்... எலன் மஸ்க்கை மிரட்டியுள்ள எஸ்கொபாரின் சகோதரர்...

03:59 PM Oct 31, 2019 | kirubahar@nakk…

போதைப்பொருள் உலகின் முக்கிய புள்ளியாக திகழ்ந்த பப்லோ எஸ்கோபரின் சகோதரர் ராபர்ட் எஸ்கோபர், தொழிலதிபர் எலோன் மஸ்க் மீது வழக்கு தொடுப்பேன் என மிரட்டியுள்ளது தொழில் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

எலன் மஸ்க்கின் 'தி போரிங் கம்பெனி' நிறுவனம் தயாரித்த 'ஃபிளேம் த்ரோயர்' என்ற கருவி தன்னுடைய யோசனையில் உதயமானது என ராபர்ட் எஸ்கோபர் கூறியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டில் எலன் மஸ்க் நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர் ஒருவர் தன்னை பார்க்க வந்தபோது, அவரிடம் 'ஃபிளேம் த்ரோயர்' பற்றி கூறியதாகவும் அதனை திருடிதான் எலன் மஸ்க் அந்த கருவியை உருவாக்கினார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், விரைவில் இதற்காக 100 மில்லியன் டாலர் (ரூ.710 கோடி ரூபாய்) இழப்பீடு கேட்டு வழக்கு தொடர் போவதாகவும் தெரிவித்துள்ளார். எலன் மஸ்கின் தி போரிங் நிறுவனம் கடந்த ஆண்டு தனது 'ஃபிளேம் த்ரோயர்' மாடலை விற்கத் தொடங்கியது, ஃபிளமேத்ரோவர்களைக் கொண்டு செல்வதற்கு எதிரான சுங்க விதிமுறைகளை முறியடிக்க நாட்-எ-ஃபிளமேத்ரோவர் என்று பெயரிடப்பட்ட இது, இதுவரை 20,000 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் விற்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT