ராபர்ட் முகாபே காலமானார்....

ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே காலமானதாக அந்நாட்டின் தற்போதைய அதிபர் எம்மர்சன் மனாங்காக்வா அறிவித்துள்ளார்.

robert mugabe passed away

95 வயதான முகாபே உடல்நல குறைவால் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் உடல்நல குறைவால் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆசிரியராகவும், ஆப்பிரிக்க விடுதலை வீரராகவும், இன நல்லிணக்கத்தின் தலைவராகவும் உலகம் முழுவதும் பிரபலமானவர் முகாபே. ஜிம்பாப்வே நாட்டின் பிரதமராக 7 ஆண்டுகளும், அதிபராக 30 ஆண்டுகளும் இருந்தவர் இவர். கடந்த 2017 ஆம் ஆண்டு இவரது சொந்த ராணுவ படையினராலேயே பதவியை விட்டு அகற்றப்பட்டார். இந்த நிலையில் தற்போது சிங்கப்பூரில் மோசமான உடல்நிலை காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

robert mugabe zimbabwe
இதையும் படியுங்கள்
Subscribe