Advertisment

விண்வெளியில் தொலைந்து போன அயர்ன்மேனை தேடிய நாசாவுக்கு பதிலளித்த அயர்ன்மேன்

ave

'அவென்ஜர்ஸ் எண்டு கேம்' திரைப்படத்தின் ட்ரைலரில் அயர்ன் மேன் தனியாக விண்வெளியில் மாட்டிக்கொண்டிருப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த மார்வெல் ரசிகர் ஒருவர் அயர்ன் மேனை காப்பாற்ற உதவுமாறு நாஸாவுக்கு ட்வீட் செய்து, அந்த டீவீட்டுக்கு நாசாவும் பதில் அளித்திருந்தது. அதில், முதலில் அவென்ஜர்ஸ் சென்ற விண்கலத்தின் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளுங்கள், அப்படி தொடர்புகொள்ள முடியவில்லை என்றால், பூமியிலிருக்கும் எங்கள் குழுவுடன் இணைந்து அவர்கள் விண்கலத்தை ஸ்கேன் செய்து காணாமல் போனவரை கண்டுபிடிக்கலாம் என கூறியிருந்தது. நாசாவின் அந்த பதிவு கடந்த வாரம் வைரல் ஆனது. இந்நிலையில் அந்த படத்தில் அயர்ன் மேனாக நடித்த ராபர்ட் டௌனி நாசாவின் இந்த டீவீட்டுக்கு தற்பொழுது பதிலளித்துள்ளார், அதில், 'நாசாவில் உள்ளவர்களை தெரிந்து வைத்திருப்பது எப்பொழுதும் நல்லதே' என கூறி நாசாவின் டீவீட்டுக்கு பதிலளித்துள்ளார்.

Advertisment

Advertisment

marvels NASA ironman avengers
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe