ஐநா சபையின் பருவநிலை தொடர்பான மாநாட்டில் உலக வெப்பமயமாதல் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

rising sea levels puts indian cities at high flood risk

Advertisment

Advertisment

இதன்படி உலகம் முழுவதும் வெப்பநிலை உயர்வால் கடல்மட்டம் உயர்ந்து வருவதால், 2100 ஆம் ஆண்டுக்குள் உலகின் பல்வேறு முக்கிய நகரங்கள் கடல் நீரால் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவின் நான்கு நகரங்கள் இந்த அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா, மும்பை, சூரத் மற்றும் சென்னை ஆகிய நகரங்கள் 2100 ஆம் ஆண்டுக்குள் கடல் நீர் உட்புகுவதால் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியேற்றப்படும் கார்பன் அளவை குறைக்கும்பட்சத்தில் கூட, 2100 ஆம் ஆண்டு இந்த பகுதிகளில் அதிகபட்சம் 2 அடி உயரம் வரை கடல் மட்டம் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கார்பன் அளவு கட்டுப்படுத்தப்படாத நிலையில், 110 செ.மீ வரை கடல் மட்டம் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல அந்தமான், நிக்கோபார் தீவுகளும் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.