Advertisment

மீண்டும் பிரதமர் போட்டியில் ரிஷி சுனாக்

 Rishi Sunak is back in the prime ministerial race

பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனாக். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் பிரிட்டனின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற யூகங்கள் கிளம்பிய நிலையில், பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனாக் பதவியேற்றால் பிரிட்டன்-இந்தியா இடையேயான உறவு வலுப்படும் எனவும் கருதப்பட்டது.

Advertisment

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கான தேர்தல் கன்செர்வேட்டிவ் கட்சிக்குள் நடந்து முடிந்த நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமர் போட்டியிலிருந்த பிரிட்டன் லிஸ் ட்ரஸை மகாராணி எலிசபெத் முறைப்படி அறிவித்தார். அதன்பின் எலிசபெத் ராணியின் உயிரிழப்பு இங்கிலாந்தை சோகத்திற்குள்ளாக்கியது. அதனைத்தொடர்ந்து பொருளாதார நெருக்கடி, மினி பட்ஜெட் சர்ச்சை போன்ற காரணங்களால் அடுத்தது பல்வேறு அமைச்சர்கள் பதவி விலகினர்.

Advertisment

இதனால்பிரதமராக பதவியேற்ற 45 நாட்களில் பிரதமர் பதவியை லிஸ் ட்ரஸ் கடந்த 20 ஆம் தேதி தனது ராஜினாமா செய்தார். இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அறிவித்துள்ளார். பெரும்பாலான எம்பிக்கள் ஆதரவு தந்த நிலையில் மீண்டும் பிரதமர் பதவிக்கு அவர் போட்டியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

britain
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe