உலக அளவில் 9 வாரங்கள் தொடர்ச்சியாக சரிந்துவந்த கரோனா பாதிப்பு, கடந்த வாரத்திலிருந்து மீண்டும் அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
உலக அளவில் கடந்த வாரத்தில் மட்டும் 30 லட்சம் கரோனா பாதிப்பு பதிவாகியதாககூறியுள்ள உலக சுகாதார அமைப்பு,முந்திய வாரங்களைவிட கடந்த வாரம் 10 விழுக்காடு அதிகமாககரோனாதொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. தொற்று பாதிப்பு மட்டுமல்லாது கரோனா உயிரிழப்புகளும் மூன்று விழுக்காடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில், இந்தியா,இந்தோனேசியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில்தான் கரோனா அதிகம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டெல்டா வகை கரோனா111 நாடுகளில் பரவியதுதான் இதற்குமுக்கிய காரணம் எனவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.