Riots break out America forTrump's order of action

அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றதில் இருந்து டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். அதன்படி, அமெரிக்காவில் இரு பாலினம், சட்டவிரோத குடியேற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள், பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை ரத்து, மற்ற நாடுகளுக்கு பரஸ்பர வரி போன்ற அறிவிப்புகளால் உலக நாடுகளே அதிர்ந்து போயின. அதிலும் குறிப்பாக வெளிநாட்டினர் சட்டவிரோதமாக நுழைவதை தடுக்கும் நடவடிக்கையை டொனால்ட் டிரம்ப் தீவிரமாக எடுத்து வருகிறார்.

டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்ற போது, சட்டவிரோத குடியேற்றத்தை சட்டத் திருத்தத்தில் கையெழுத்திட்டார். அந்த வகையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினர்களை அடையாளம் காணப்பட்டு கைது செய்யும் பணி அமெரிக்கா முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. சில தினங்களுக்கு முன்பு மெக்சிகோ, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோதமாக குடியேறிவர்களை அமெரிக்கா நாடு கடத்தியது. நாடு முழுவதும் சட்ட விரோதமாக குடியேறிவர்களை அடையாளம் கண்டு தினமும் 3,000 பேரை கைது செய்ய வேண்டும் என்பதை இலக்காக வைத்து செயல்படுமாறு அதிகாரிகளுக்கு டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

Advertisment

Riots break out America forTrump's order of action

அந்த உத்தரவின்படி, கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு முறையான ஆவணங்கள் இன்றி 44 ஊழியர்கள் தங்கியிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 44 பேருக்கு ஆதரவாகவும் அரசுக்கு எதிராகவும், வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று முன்தினம் (07-06-25) போராட்டத்தில் ஈடுபட்டு பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர். அவர்கள் மீது தடியடியும் நடத்தியதால் போர்களமாக காணப்பட்டது.

இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 44 பேருக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் நடத்திய அந்த போராட்டத்தில், பொது சொத்துக்கள் சேதமாக்கப்பட்டது. வாகனங்களுக்கு தீ வைத்து அதிகாரிகளையும் பொது மக்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் கலவர பூமியாக மாறியுள்ளது. இந்த கலவரத்தை கட்டுப்படுத்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே, அதிகாரிகளை தாக்கினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என போராட்டக்காரர்களுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.