சிறைச்சாலையில் ஏற்பட்ட தொடர் கலவரத்தால் பிரேசில் நாட்டில் 55 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

Advertisment

riot in brazil prison

பிரேசில் நாட்டின் மனஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 15 கைதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அப்பகுதியை சுற்றி உள்ள அண்டோனியா டிரிடெண்ட் உள்ளிட்ட நான்கு சிறைச்சாலைகளில் கலவரங்கள் ஏற்பட்டன. இந்த கலவரத்தில் 40 பேர் உயிரிழந்தனர். அடுத்தடுத்த நாட்களில் சிறை கைதிகள் மோதலால் 55 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உலகிலேயே அதிகமான சிறைக்கைதிகளைக் கொண்ட மூன்றாவது நாடான பிரேசிலில் 1,20,000 பேர் சிறைக்கைதிகளாக உள்ளனர். பல முறை கைதிகளுக்கும் வன்முறை ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் கடந்த ஆண்டுகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல கடந்த 2017 ஆம் ஆண்டு சிறையில் நடந்த கலவரத்தில் 56 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.