palyboy

Advertisment

இத்தாலி நாட்டில் பிரபலமான ப்ளேபாயான மாவுறிஸியோ சான்ஃபான்டி (63) என்பவர் 23 வயது பெண்ணுடன் உடலுறவு வைத்தபோது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர் 1970ஆம் ஆண்டுகளில் ரிமினி நகரத்தின் இரவு விடுதிகளை பிரபலம் அடைய செய்வதற்காக பல்வேறு வகையில் பெரும்பங்காற்றியவர் என்று கூறப்படுகிறது. இதற்காக சுமார் 6000 பெண்களுடம் உடலுறவு வைத்துக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.

இவர் கடந்த செவ்வாய்கிழமை அன்று 23 வயது பெண்ணுடன் கார் ஒன்றில் உறவில் ஈடுப்படும்போது மாரடைப்பால் இறந்துள்ளார். உடனடியாக அங்கிருந்த இளம் பெண் ஆம்புலன்ஸுக்கு தகவல் அனுப்பியும் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

இத்தாலியில் ரிமினியின் காதலன், இரவுகளின் காதலன், பெண்களுக்கு மிகவும் பிடித்தமானவர் என்று இவரைசொல்வதுண்டு. இரவுகளின் காதலனை ரிமினி நகரம் இழந்துவிட்டதாக அந்த நகரின் மேயர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment

1972 ஆம் ஆண்டில் இரவு விடுதியில் பணிக்கு சேர்ந்தவர். வெளிநாட்டு பயணிகளை தனது பேச்சு திறமையால் விடுதி அழைத்த் வருவதே இவரின் முதல் வேலையாக இருந்துள்ளது.அதன் பின்னர் படிப்படியாக வளர்ச்சி பெற்ற சான்ஃபான்டி, ஒரு கோடை காலத்தில் சுமார் 200 பெண்களுடன் உறவில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.