Return visa service from Canada to India

Advertisment

கனடாவுக்கும், இந்தியாவுக்கும் கடந்த சில காலங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் 18ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கனடா நாட்டு குடிமகனாக இருந்த நிஜாரின் படுகொலைக்கு இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

அவரது குற்றச்சாட்டைஇந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வந்தது. அந்த நிலையில், கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை கனடாவை விட்டு வெளியேறுமாறு கனடா வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயர் அதிகாரியை வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், கனடாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், இனவெறி தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாகவும் இந்தியா எச்சரித்தது. இதனிடையே, கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி கனடாவுக்கான விசா சேவையை இந்தியா நிறுத்தியது. மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரகம் விசா வழங்கும் சேவைகளை மறு அறிவிப்பு வரும் நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசு தெரிவித்திருந்தது.

Advertisment

இந்த நிலையில், கனடாவுடனான உறவில் விரிசல் சரியாகும் நிலையில், கனடாவில் இருந்து இந்தியா வர இன்று (26-10-23) முதல் மீண்டும் விசா சேவையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம், கனடாவில் இருந்து தொழில், மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக பயணிகள் இந்தியாவுக்கு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது.