Advertisment

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு? - மெஸ்ஸி பதில்

kl;

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணி கோப்பையை வென்றுள்ளது. பரபரப்பாக நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது அர்ஜெண்டினா. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தியது.

Advertisment

அர்ஜெண்டினா பிரான்ஸ் அணிகள் மோதிய இந்த ஆட்டம் (3-3)என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்ததால் பெனால்டி சூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பெனால்டி சூட் அவுட்டில் (4-2) என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வெற்றி பெற்றது. அர்ஜெண்டினா அணிக்காக மெஸ்ஸி 2, டி மரியா ஒரு கோல் அடித்தனர். 36 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜெண்டினா அணி மீண்டும் கோப்பையைக் கைப்பற்றியது.

Advertisment

இந்த வெற்றியை உலகில் உள்ள கால்பந்து ரசிகர்கள் கொண்டாடி வரும் இந்த வேளையில் சர்வதேசப் போட்டிகளில் இருந்து மெஸ்ஸி ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் நேற்று முதல் பரவி வந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக பேட்டியளித்துள்ள மெஸ்ஸி, சர்வதேச போட்டிகளில் அர்ஜெண்டினா அணிக்காகத் தொடர்ந்து விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார். அதன் மூலம் அவரின் ஓய்வுசர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

messi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe