ADVERTISEMENT

தனிநபருக்கு விற்கப்படும் அத்தியாவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாடு!

10:51 PM Mar 06, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது விதித்தப் பொருளாதார தடைகள் காரணமாக, ரஷ்யாவில் பதற்றம் நீடிப்பதால், அத்தியாவசியப் பொருட்களின் விற்பனைக்கு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

பொருளாதார தடைகள் காரணமாக, விலைவாசி உயரும் அபாயம் இருப்பதால், மக்கள் தங்களால் இயன்ற அளவு அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவித்து வருகின்றன. இந்த நிலையில், ரஷ்யாவின் வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனிநபருக்கு விற்பனை செய்யும், அத்தியாவசிய பொருட்களின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என சில்லறை வணிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, ரொட்டி, அரிசி, மாவு, முட்டை, பால் பொருட்கள், காய்கறி உள்ளிட்டவற்றின் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT