Advertisment

இலங்கை அதிபருக்கு எதிரான தீர்மானம் தோல்வி! 

Resolution against the President of Sri Lanka failed!

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

Advertisment

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பமே காரணம் என அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டி வரும் சூழலில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத்தில் இன்று (17/05/2022) நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தை நாடாளுமன்ற சபாநாயகர் ஏற்க மறுத்ததால், வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

Advertisment

69 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்த நிலையில், 119 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர்.இந்த நிலையில், இலங்கை அதிபருக்கு எதிரான தீர்மானம் தோல்வி அடைந்தது.

Parliament
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe