நேரடி ஒளிப்பரப்பு நடைபெற்று கொண்டிருந்த சமயம் பெண் நிருபருக்கு லாட்டரியில் பணம் விழுந்த சம்பவம் தெரிந்ததால் அவர் மகிழ்ச்சியில் திக்குமுக்கு ஆடிபோன சம்பவம் நடைபெற்றுள்ளது. ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் நாடிலியா. இவர் அங்கு பிரபலமாக உள்ள தொலைக்காட்சியில் நிருபராக பணியாற்றி வருகிறார். நேற்று அவர் லாட்டரியில் பரிசு விழுந்தவர்களின் விவரங்களை வரிசையாக நேரலையில் கூறிவந்துள்ளார். அப்போது அவரின் பெயரும் அந்த பேப்பரில் இருந்ததுள்ளது.
கடந்த வாரம் அவர் லாட்டரி வாங்கியது திடீரென அவருக்கு ஞாபகம் வரவே, சந்தோஷத்தில் அவர் துள்ளிக் குதித்துள்ளார். மேலும், நேரலையில், மற்றொரு முனையில் இருந்தவர்களிடம், தான் இனி அலுவலகத்துக்கு வர மாட்டேன் என்றும் சந்தோஷத்தில் கத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.