Advertisment

ராணுவ அதிகாரியின் இறுதிச்சடங்கில் சிரித்து மகிழ்ந்த உறவினர்கள்..! ஏன் தெரியுமா..?

இறந்த ராணுவ அதிகாரியின் உடல்முன் அவரது உறவினர் சிரித்தபடியே அவரை நல்லடக்கம் செய்த நிகழ்வு அயர்லாந்தில் நடந்துள்ளது.

Advertisment

relatives laughing at ex military officers funeral

அயர்லாந்தின் லீனெஸ்டர் மாகாணத்தில் உள்ள கில்கென்னி நகரை சேர்ந்தவர் ஷே பிராட்லி. ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான இவர் கடந்த 12-ந் தேதி உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். அவர் தனது கடைசி ஆசையாக, அனைவரும் தனது இறப்பின் போது தன்னை சிரித்தபடியே மகிழ்ச்சியாக வழியனுப்பி வைக்க வேண்டும் என தனது மகளிடம் தெரிவித்திருந்துள்ளார். சொன்னதோடு மட்டுமல்லாமல், தன்னை அடக்கம் செய்யும் போதுஒலிபரப்ப கூறி ஆடியோ ஒன்றையும் பதிவு செய்து வைத்திருந்துள்ளார். அவரது அடக்கத்தின் போது அந்த அந்த பதிவு ஒலிபெருக்கியில் போடப்பட்டது.

Advertisment

தனது சவப்பெட்டிக்குள் இருந்து உதவி கேட்பதுபோல அவர் நகைச்சுவையாக பேசியிருந்த அந்த ஆடியோ அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்தது. இறுதியில் அவரது கடைசி ஆசைப்படியே உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் சிரித்தபடி மகிழ்ச்சியுடன் அவரது உடலை அடக்கம் செய்தனர். இறப்பில் கூட தங்களை கஷ்டப்படுத்த மனமில்லாமல் சிரிக்க வைத்து சென்ற தனது தந்தையின் செயல் குறித்த அவரது மகளின் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ireland weird
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe