Skip to main content

ரெட்மி நோட் 7...?

Published on 08/01/2019 | Edited on 08/01/2019

 

r

 

ரெட்மி நோட் 7 வரும் 10-ம் தேதி வெளியாகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், அந்நிறுவனத்தின் சார்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. 

 

இதன் சிறப்பம்சங்களே இந்த ஃபோன் வருகைக்காக காத்திருக்கும் நபர்களுக்கு ஆர்வத்தைக் கூட்டுகிறது. ரெட்மி நோட் 7, இண்டர்நல் ஸ்டோரேஜ் 64 ஜி.பி, 6 ஜி.பி ரேம், பின்புறம் கேமரா 12 மற்றும் 5 எம்.பி.கள் கொண்டது ஆனால், 48 எம்.பி. சென்சாருடன் வெளிவருகிறது. செல்ஃபி கேமரா 24 எம்.பி கொண்டது. இதன் விலை 11,000 ரூபாய் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.9,999-ல் 3 ஜிபி ரேம் கொண்ட ஃபோன்... இந்தியாவில் ரெட்மி 7 மற்றும் ஒய் 3 அறிமுகமானது

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

சீன நிறுவனமான ரெட்மி, இந்தியாவில் தனது நிறுவனத்தின் ரெட்மி 7, ஒய்3 ஆகிய இரு ஃபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏப்ரல் 29-ம் தேதி முதல் ரெட்மி இணையதளம் மற்றும் விற்பனையகங்களில் விற்பனைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ரெட்மி 7 வகை ஃபோன் பின் பக்க கேமரா- 12 மெகா பிக்சல், 2 மெகா பிக்சல் மற்றும் செல்ஃபி கேமரா - 8 மெகா பிக்சல் (செயற்கை நுண்ணறிவு வசதியோடு) கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரேம் 2 ஜிபி, 32 ஜிபி வரை ஸ்டோரேஜ் வசதி, 3 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மெமரி கார்டு வசதி 512 ஜிபி என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் ஆரம்ப விலை  ரூ.7,999. மேலும் தண்ணீர் உட்புகாத தன்மை கொண்டதாக இந்த ஃபோன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

redmi launched redmi 7 and y3 in India

 

ரெட்மி ஒய்3 மாடல் ஃபோன், பின் பக்க கேமரா- 12 மெகா பிக்சல், 2 மெகா பிக்சல் மற்றும் செல்ஃபி கேமரா - 32 மெகா பிக்சல் (செயற்கை நுண்ணறிவு வசதியோடு) கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரெட்மி ஒய்3 மாடலில் 3 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம் என இரண்டு வகையில் வெளிவந்துள்ளது. 3 ஜிபி ரேம் ஃபோனில் 32 ஜிபி  ஸ்டோரேஜ் வசதி கொண்டதாகவும், 4 ஜிபி ரேம் ஃபோனில் 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டதாகவும் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம் மெமரி கார்டு வசதி 512 ஜிபி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபோனும் தண்ணீர் உட்புகாத தன்மை வசதி உடையது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.9,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 


 

Next Story

பிளாக் ஃப்ரைடே விற்பனையில் சாதனை படைத்த ரெட்மி நோட் 6 புரோ...!

Published on 24/11/2018 | Edited on 24/11/2018

சீன நிறுவனமான ஜியோமி ரெட்மி தனது புதிய  நோட் 6 புரோ மாடலை 22-ம் தேதி அறிமுகம் செய்தது. 

 

aad

 

 

இந்த நோட் 6 புரோ 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதன் விலை ரூ. 13,999 மற்றும் ரூ. 15,999 என்று அறிமுகமானது. மேலும் பிளிப்கார்ட் ஆன்லைன் விற்பனையில் ‘பிளாக் ஃப்ரைடே விற்பனை’ மூலம் ரூ. 1000 ஆஃபர் என அறிவித்திருந்தது. அதனால் இந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரே நாளில் 6 லட்சம் ரெட்மி நோட் 6 புரோ விற்று சாதனை படைத்துள்ளது ரெட்மி நோட் 6 புரோ.