ds

போட்ஸ்வானா நாட்டில் கடந்த சில மாதங்களில் சுமார் 360 யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை முடிவுகள் வெளியாகியுள்ளன.

Advertisment

வன உருவாக்கத்தில் மிக முக்கிய பங்குடைய உயிரினமான யானை இனம், உலகின் பல நாடுகளில் அழிவை நோக்கிப் பயணித்து வருகின்றன. இந்நிலையில் ஆப்பிரிக்க வனப்பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக மர்மமான முறையில் யானைகள் உயிரிழப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக போட்ஸ்வானா நாட்டின் ஒகவாங்கோ டெல்டா பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் அதிகளவிலான யானை மரணங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பிரிட்டனை மையமாகக் கொண்டு இயங்கும் நேஷனல் பார்க் ரெஸ்க்யூ எனும் வன உயிர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த டாக்டர் மெக்கான் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதில், ஒகவாங்கோ டெல்டா பகுதியில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 360-க்கும் அதிகமான யானைகள் தொடர்ச்சியாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், யானைகளின் தொடர் இறப்புக்கான காரணத்தைக் கண்டறியும் வகையில் கனடா, அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கு யானைகளின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் அனுப்பப்பட்டிருந்தன. இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், அந்த டெல்டா பகுதியில் பரவிய இயற்கை நச்சுகள் காரணமாகவே இந்த யானைகள் உயிரிழந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.