ADVERTISEMENT

”நிச்சயமாக ரஷ்யா போரை விரும்பவில்லை” - ரஷ்ய அதிபர் புதின்!

10:44 AM Feb 16, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்டகாலமாகவே பிரச்சனை நிலவி வரும் நிலையில், அண்மையில் ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்தது. இதனால் ரஷ்யா எந்த நேரமும் உக்ரைன் மீது படையெடுக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என மறுத்தது. ஆனால் இதனை நம்பாத அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள், உக்ரைனுக்கும், கிழக்கு ஐரோப்பாவிற்கும் அதிநவீன பாதுகாப்பு ஆயுதங்களையும், போர்க் கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பின.

இந்தநிலையில் உக்ரைன் எல்லையில் இருந்த படைகளை ரஷ்யா குறைத்துள்ளது. இதன்மூலம் போர் பதற்றம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் ரஷ்ய அதிபர் புதின், தாங்கள் போரை விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸூடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த புதின் கூறியுள்ளதாவது: ”(மேற்கத்திய நாடுகளுடன்) மேலும் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். பேச்சுவார்த்தை பாதையில் செல்ல நாங்கள் தயார். நிச்சயமாக ரஷ்யா போரை விரும்பவில்லை. ஆனால் வாஷிங்டனும் நேட்டோவும் எவ்வாறு பாதுகாப்பு கொள்கையை தங்கள் இஷ்டத்திற்கு விளக்கிக் கொள்கின்றன என்ற விஷயத்தில் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது”. இவ்வாறு புதின் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT