ADVERTISEMENT

இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்பு!

02:56 PM Jul 21, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டு போராட்டம் வெடித்துள்ளது. மக்களின் சீற்றத்திற்கு பயந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மாளிகை விட்டு வெளியேறிவிட்டார்.

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கையில் நேற்று அதிபருக்கான வாக்கெடுப்பு இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே, அழகப்பெரும,அனுரா திசாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் மொத்தமுள்ள 225 எம்.பிக்களில் இரண்டு பேர் வாக்களிக்கவில்லை. மீதம் பதிவான 223 வாக்குகளில் 4 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 134 ஆதரவு வாக்குகளுடன் ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தப்பியோடிய கோத்தபய ராஜபக்சேவின் பதவி காலமான 2024 ஆண்டு நவம்பர் வரை ரணில் விக்ரமசிங்கேவின் இலங்கை அதிபர் பதவி தொடரும் என்ற நிலையில், இன்று இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு ரணில் விக்ரமசிங்கே இலங்கை அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT