Skip to main content

கம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்ட சிலை...

Published on 06/07/2019 | Edited on 06/07/2019

கம்போடியாவை சேர்ந்த கலை பண்பாட்டுத் துறை மற்றும் பன்னாட்டு தமிழர் நடுவம் ஆகிய அமைப்புகள்  இணைந்து காஞ்சிபுரம், மாமல்லபுரம், தஞ்சாவூர், சிதம்பரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கோயில்கள் மற்றும் புராதன இடங்களில் கடந்த 5 நாட்களாக ஆய்வு மேற்கொண்டது.

 

rajendra chozhan statue to be build in cambodia

 

 

இந்த ஆய்வின் முடிவில் கம்போடியா நாட்டின் கெமர் பேரரசுக்கும், தமிழகத்தை சேர்ந்த பல்லவ மற்றும் சோழ பேரரசுக்கும்  மிக நெருங்கிய தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கம்போடிய நாட்டு அரசு அதிகாரிகள், "கம்போடிய நாட்டு பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் பல்லவ மற்றும் சோழ பேரரசுகளின் வரலாற்றை பாடமாக வைக்கவும், திருக்குறளை கெமரில் மொழியில் பெயர்த்து பள்ளிகளில் பாடமாக வைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கும், இரண்டாம் நந்திவர்மனுக்கும் சிலை வைக்க திட்டமிட்டிருப்பதாகவும் அச்சிலைகளின் திறப்புவிழா கம்போடியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும்" என்று கூறினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்து என்பது மதம் அல்ல தேசம்... ராஜ ராஜ சோழன் இந்து தான்” - ஹெச்.ராஜா ஆவேசம்

Published on 05/10/2022 | Edited on 05/10/2022

 

"Hindu is not a just religion it is nation.. Raja Raja Cholan is Hindu" - H Raja Avesam

 


“இந்து என்பது மதம் அல்ல. இந்து என்பது தேசம்” என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். 

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சட்டப்படி தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவாகச் செயல்படுவது பேசுவது கிரிமினல் குற்றமாகும். பயங்கரவாதத்திற்கு ஆதரவாக, பயங்கரவாதிகளின் நண்பனாக இருக்கின்ற திருமாவளவன், சீமான் போன்றோர் அறிவித்துள்ள மனிதசங்கிலிக்கு தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்த விரும்புகிறேன். இந்நாட்டின் எதிரிகள் திருமாவளவனும் சீமானும். இதற்கு முழு ஆதாரம் என்னிடம் உள்ளது.  

 

ஸ்டாலின் நல்லவர். சுற்றி இருப்பவர்கள் எல்லாம் கொம்பு சீவி விடுவார்கள். ஸ்டாலின் தலையை சிலுப்பினால் 1991 ல் நடந்தது இப்பொழுதும் நடக்கலாம். தமிழகத்தின் அரசியல் களத்திலிருந்து சீமான் மற்றும் திருமாவளவனை வேரோடு வேறாக தூக்கி எரியும் வரை நான் ஓயமாட்டேன். 

 

ராஜராஜ சோழனை இந்துவாக மாற்றிவிட்டோமா? ராஜ ராஜ சோழன் கட்டிய ரெண்டு சர்ச் ரெண்டு மாஸ்க் எங்க இருக்குனு சொல்லிட்டா போதும். இந்து என்பது மதம் அல்ல. இந்து என்பது தேசம். அதனால் தான் சட்டம் இந்துவை நேர்மறையாகச் சொல்லவில்லை. இந்த மண்ணில் பிறந்த மதங்கள் எல்லாம் இந்து மதங்கள் என்று சொல்கிறது. 

 

இங்கு 2300 ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்த ஆதிசங்கரர் 72 வழிபாட்டு முறைகளாக இருந்ததை 6 முறைகளாக ஒருங்கிணைத்தார். எனவே சிவன் வேறு சைவம் வேறு இந்து வேறு இல்லை. வேதம் வேறு தமிழ் வேறு அல்ல. வேதம் வேறு சைவம் வேறு அல்ல. எனவே ராஜ ராஜ சோழன் இந்து தான். இந்தியச் சட்டத்தின் படியும் அவர் இந்து தான் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிசங்கரர் உருவாக்கியதன் படியும் இந்து தான்” எனக் கூறினார்.

Next Story

“எங்கள் பாட்டன் ராச ராச சோழன்... உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது” - சீமான்

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

“Our கிங் Rasa Rasa Cholan” - Seaman Obsession

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா  நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார். அதில் திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கின்றனர் எனவும் பேசி இருந்தர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் எங்கள் பாட்டன் ராசராச சோழனை இந்து மன்னன் என பேசுவது வேடிக்கை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

 

சென்னையில் மா.பொ.சி நினைவு நாளை ஒட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாடப்புத்தகத்தில் மாணவர்களுக்கு வர்ணாசிரம கோட்பாடு, புரட்சியாளர் அம்பேத்கர், அப்துல்கலாம் போன்றவர்கள் இந்த வர்ணத்தை சார்ந்தவர்கள் என கேட்கும் போது உங்களுக்கெல்லாம் கோவம் வருகிறது. அந்த கோவம் எனக்கும் வருகிறது. ஒரு காலம் வரும் பொழுது அந்த பாடப்புத்தகங்களை நாங்கள் கொளுத்துவோம் என்கிறோம். அவர்கள் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை கொளுத்துவோம் என புரிந்து கொள்கிறார்கள்.

 

உங்கள் பிரதமர் மோடியுடனே நாங்கள் சண்டை இடுகிறோம். அவருக்கு பிரதமராக இருக்கு நாக்பூர் தலைமை பீடத்துடனே நாங்கள் மோதுகிறோம். நீங்கள் எல்லாம் எம்மாத்திரம். அவர் ஒரு பரிதாபம் அவரை விட்டுவிடுவோம். பாஜக விடமும் ஹெச்.ராஜாவின் குடும்பத்தினரிடமும் அன்பாக கேட்டுக்கொள்வது அவரை நல்ல மனநல மருத்துவரிடம் சேருங்கள்.

 

வெற்றிமாறன் சொன்னது உண்மை தானே. ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் இருந்த திரைக்கலையை பொதுமைப்படுத்தியது அன்று இருந்த திராவிட இயக்கங்கள் தான். எங்கள் பாட்டன் ராசராச சோழனை இந்து மன்னன் என பேசுவது வேடிக்கை. வள்ளுவருக்கு காவி பூசியது போல் தான்.  உலகத்திற்கே தெரியும் அவர் சைவ மரபு என்பது. பன்னிரு திருமறைகளை காப்பாற்றி தந்தவர் அவர்தான். ராச ராசன் என்பது என் அடையாளம். உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது” எனக் கூறினார். 

 

செய்தியாளர் சந்திப்பில் ஹெச்.ராஜாவை அநாகரீகமாக பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.