அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்களாவில் எப்.பி.ஐ ரெய்டு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து டொனால்ட் ட்ரம்ப் கூறியதாவது, " தெற்கு ப்ளோரிடாவில் உள்ள தனது கடற்கரை பங்களாவில் எஃப்.பி.ஐ சோதனை நடத்தியது" எனத் தெரிவித்துள்ளார். ஆனால் ட்ரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதா என்பது குறித்து எஃப்.பி.ஐ தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்படவில்லை.
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தன் ஆட்சி காலத்தில், 30,573 பொய்யான அல்லது தவறாக வழிநடத்தக்கூடிய செய்திகளைத் தெரிவித்துள்ளதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே ட்ரம்பின் இந்த தகவல் உண்மையா பொய்யா என அலசி வருகின்றன அமெரிக்க ஊடகங்கள்.